திருமால் திருப்புகழ்

திருமால் திருப்புகழ் (1)

 

கிரேசி மோகன்

Tamil-Daily-News-Paper_52750360966
தனதன தனான தனதன தனான
தனதன தனான-தனதான

“இறகும யிலாடி இலகுசு ருள்கேச
இடையர்ம கனான -பெருமாள்காண்
விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
கரியவி ழிபாசம் பொழியவ ருராம
கவுசலை குமார -பெருமாள்காண்
குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
உமிழள வுநாசி -பெருமாள்காண்
கறவையி னம்மேய குழலமு தகானம்
பொழிஅத ரராக – பெருமாள்காண்
ஜனகம கள்சாய சவுகரி யமான
விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
மருகன்மு றைமாம -பெருமாளே”….
—————————————————————

 
தனதன தனான தனதன தனான
தனதன தனான-தனதான

“திரைகட லுளோடி திரவிய வியாச TN_145110000000
மறைகொண ருமீன -பெருமாள்காண்
வரைவழு விடாது வலியமு துகாள
உருவில்க டலாமை -பெருமாள்காண்
சிறையவ னிமீள விரையும வதார
வடிவுரு வராக -பெருமாள்காண்
இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
அழையவ ருசீய -பெருமாள்காண்
வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
உலகள வுகாணு -பெருமாள் காண்
மழுபர சுராம,உழவுப லராம
பழகுகு கராம -பெருமாள்காண்
இறையென உலாவி பறவையே னவேடன்
இரையுறு முராரி -பெருமாள்காண்
தருமம துவாழ தரணிஅ வதார
தசமுக புராண -பெருமாளே”….
—————————————–

படத்திற்கு நன்றி : http://www.tamilthottam.in/t35761-topic

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. Avatar

  திருப்புகழ் ஏற்கும் பெருமாளும்
  திருபுகழ் சொல்லும் பெருமாளும் 
  திருபுகழ் சேர்க்கும் திருநாவும்
  ஒருகாலும் விட்டு அழியாவே
  பகிர்வுக்கு நன்றி, கவிஞர் வாலியுடன் மயிலை 
  காஞ்சிமாமுனிவர் கவியரங்கில் முதன்முதலில்
  உங்களைச் சந்தித்த ஞாபகம் இன்று ரி பிலேய்டு.

 2. Avatar

  கோதை அழகு கோவிந்தனும் அழகு. நீர் சொன்ன பாவை அழகு. இன்னும் அடுக்க ஆசைதான். தமிழ் இலக்கணம்  கற்று வருடங்கள் ஓடிவிட்டதால் மாலைப்பொழுதின் முடிவில் இருக்கும் எனக்கும் பெருமாள் அடி காட்டின உங்களுக்குப் பல்லாண்டு நல்வாழ்வு கிடைக்க ப் பெருமாளையே வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க