பரிசுகள் வழங்கிய ‘ஒஸ்தி’ குழு – செய்திகள்
இரண்டாயிரத்து பத்தில் இந்தி மொழியில் வெளியாகிய வெற்றிப் படம் ’தபாங்’. இப்படம் இப்போது தமிழில் தயாராகி வருகிறது. திருவாளர்கள் மோகன் அப்பாராவ், டி. ரமேஷ் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் இயக்குநர் எஸ். தரணி.
இதில் சிலம்பரசன், கிதன் ரமேஷ், ரிச்சா கங்கோபாத்யாய் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கின்றனர்.
இத்திரைப்படக் குழுவினர், அண்மையில், இந்த ஆண்டு பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினர். பரிசுத்தொகையின் மொத்த மதிப்பு ரூபாய். இரண்டு இலட்சம் ஆகும்.
பரிசு பெற்றவர்களின் விவரம் கீழ்வருமாறு:
பன்னிரண்டாம் வகுப்பு
செல்வி கே. ரேகா ( விஜய வித்தியாலயா உயர்நிலைப்பள்ளி, ஓசூர்)
மாவட்ட முதலிடம் : 1190 / 1200 , பரிசுத் தொகை : ரூபாய். ஒரு இலட்சம்.
பத்தாம் வகுப்பு
செல்வி மின்னல் தேவி (செய்யா உயர்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை)
செல்வி ரம்யா (ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிபாளையம்)
செல்வி சங்கீதா (முத்தம்மாள் உயர்நிலைப்பள்ளி, சேலம்)
செல்வி ஹரிணி (அவர் லேடி பள்ளி, திருவொற்றியூர்)
பரிசுத் தொகை : தலா ரூபாய் இருபது ஆயிரம்.