கிரேசி மோகன்

 

கட்டவாக்கம் விஸ்வரூப நரசிம்மப் பெருமாள்’’
——————————————————————————————

ஸ்ரீவிஸ்வரூப நரசிம்மர் நன்றி: சுப்பிரமணியம்

தத்ததான தனதான தத்ததான தனதான
தத்ததான தனதான -தனதான….

———————————————————————————————————————–
பித்தமோடு கபவாதம், ரத்தசோகை குதமூலம்,

விஸ்வரூப நரசிம்மர் நன்றி : சுப்பிரமணியம்
விஸ்வரூப நரசிம்மர்
நன்றி : சுப்பிரமணியன்

உப்புசீனி உயர்வாகி -தடியூனி,
எட்டுநாலு புதையீறு பற்களாட, நரைமேவ
சொட்டையான தலைநோவில் -விழிசோர,

முத்தவ்யாதி கிழமாகி, சத்திலாது பிணமாக,
கொட்டுமேள மனையாளும், -மகனோடு,
கட்டிஓல மிடகாடு உற்றபோது,
’’ஒருகாதும்
அற்றஊஸி’’ வருமோசொல்-துணையாக.

குப்பைமேனி தனிலாடும் தப்புநானின் விபரீதம்
செப்பலோசை இசையாலே-ரமணேசர்,
அப்பளாமை இடுவேளை, புத்திகூற அழகாயி(தாயார் அழகம்மை)
உற்றஞானம், அடியேனும்-பெறவேணும்.

அப்பன்கேள, ஒருதூணில் நெட்டைமாலன் உளதாக,
அச்சிறானின் மொழிவாழ, -பலதூணில்
பக்தராஜன் மனம்போல, பெத்தசாமி(விஸ்வரூப) வடிவான
கட்டவாக நரசீய -பெருமாளே
————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *