சுசி அப்படித்தான் – திரைக் கண்ணோட்டம்
படத்தின் நாயகன், நாயகி அணைவரும் புதுமுகங்கள். இரண்டு நாயகர்கள் (புனீத், ரத்தன்) மூன்று நாயகிகள் (ஷாயிரா கான், வாசவி மற்றும் லீமா).
திருமணம் ஆனா ஒருவனை காதலிக்கும் ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகு வேறு பெண்ணை காதலிக்கும் ஒரு ஆண். இவர்களின் வாழ்கையில் நடக்கும் விபரீதம் தான் கதையின் கரு. காதல், பாசம், காமம் இவற்றின் இடையே நடக்கும் போராட்டத்தில், இவர்களின் நிலை என்ன? என்பதை உணர்த்துகிறது இத்திரைப்படம். படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர்கள் வசந்தமணி, ரவி மேனன் ஆவர். ஜூலை 2011 ல், இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.