கே. ரவி

 

ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்goddess-saraswati-hindu-goddess-learning
எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
(ஏதாயினும்)

நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
(ஏதாயினும்)

ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
ஆவியில் அமுதம் நிறைப்பவளே
ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
(ஏதாயினும்)

பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
பாடலொன்றே நம் சுடர்விளக்கு
(ஏதாயினும்)

படத்திற்கு நன்றி:

http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஏதாயினும் சொல்

  1. இது பக்திப் பாடலா?  காதல் பாடலா? படமில்லாது படித்தால் என்ன முடிவெடுப்பதென குழப்பம் 

  2. தேமொழி உன் குழப்பத்தை நானும் வழிமொழிகிறேன். காதலுக்கும், பக்திக்கும் எனக்கு எப்பொழுதுமே வித்தியாசம் தெரிந்ததில்லை. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடும் போது எப்படித் தெரியும்? பராசக்தி, கண்ணம்மா, காளி, சிவன், காதலி எல்லாம் ஒன்றே. பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் படுமோ என்று கவிச்சக்ரவர்த்தியே கேட்டுவிட்டான். பித்தனுக்கும், பக்தனுக்கும் வேறுபாடு உண்டோ என் தோழி? “நீயா நீல வானமா” என்ற என் பாடலைக் கேட்டால் என்ன சொல்வாயோ! கே.ரவி

  3. “நீயா நீல வானமா” பாடல் பற்றி இப்படி ஆவலைத் தூண்டிவிட்டு விட்டீர்களே!!! படித்துப் பார்க்க ஆவல் மேலிடுகிறது, இங்கு வல்லமையில் பகிர்ந்து கொள்வீர்களா நண்பரே.

    அன்புடன்
    ….. தேமொழி

  4. தேமொழி கேட்டுக் கொண்டதால் கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன், விரைவில். இப்படிப் பட்ட பாடல்களைக் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்கக் கூடாது. அதன் ஒலிக்கோப்பு 10 எம்.பி க்கும் அதிகமாக உள்ளது. வலைத்தளம் விரிவு செய்யப் படுவதற்காகக் காத்திருக்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *