திருமால் திருப்புகழ் (87)
கிரேசி மோகன்
——————————————————————————————————————-

Keshav
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————-
’’கண்ணன் அந்தாதி’’
———————————–

இருளை ஒழிக்க, இருளில் பிறந்த,
இருள்நிறம் உற்ற இறைவா, -மருளை,
மதிக்குக் கொடுக்க, மயங்கு(து) அதனால்,
விதிவசம் ஆனதே வாழ்வு….(41)
வாழவன் பக்தியில், வீழவன் பாதத்தில்,
கூழுக்காட் பட்டுக், குலையாதே, -பாழ்மனமே,
போக்கத்த போகத்தின், தாக்கத்தில் போகாது,
நோக்கத்தை, நாரண னாக்கு….(42)
நாக்கால் நவநீதன், மூக்கால் மணிவண்ணன்,
கேட்கும் படிசெவியில், கோவிந்தன், -நோக்கும்,
விழியால் வரதன், விரலால் அரியென்(று),
ஒழிந்தபோ(து) எல்லாம், ஒழுகு….(43)
ஒழுக உறிவெண்ணை, கூட்டாளி ஆகப்
பழகு பயல்கள் பதுங்க, -அழுத,
விழியோடன்(று), ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
பழியோடு நிற்கும், பரம்….(44)
பரம சுகமான, பாற்கடல் நீங்கி,
நரனாய்ப் பிறந்த, பரமே -ஒருநாள்,
முலைப்பால் விஷத்தில், தலைகால் புரியாத்,
திளைப்பால் கருத்தாயோ, தீய்ந்து….(45)
———————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

100 வது பதிவிற்கு வாழ்த்துகள்… பாராட்டுகள் தினந்தோறும் வெண்பா பாடும் கவிஞருக்கு.