இன்பமே.. உந்தன்பேர் பெண்மையோ
கவிஞர் காவிரி மைந்தன்
இன்பமே.. உந்தன்பேர் பெண்மையோ – புலவர் புலமைப்பித்த ன் – எம்.எஸ்.வி ஸ்வநாதன் – டி.எம்.செள ந்திரராஜன் பி.சுசீலா எம்.ஜி.ஆர் . ராதாசலூஜா
இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் சுபலாலி! வஞ்சணையில்லாத வார்த்தைகளின் கூட்டுக் கொள்ளை! சந்தக்கவிதைக்கு சரியான சான்று! புல்லாங்குழலில் தொடங்கிடும் காதல் பூபாளம்! வார்த்தைகளும் இசையும் போட்டியிட்டு நடைபோடும் புதிய பவனி! இலக்கியவானிலிருந்து பொழிந்த இன்பத்தமிழ் மழை! அன்பின் பரிமாற்றத்திற்காகவே நடைபெற்ற ஒரு ஆனந்த விழா!
இன்பமே.. உந்தன்பேர்பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என்நெஞ்சில்ஆடும்பருவக்கொடி..
இன்பமேஉந்தன்பேர்வள்ளலோ..
உன்இதயக்கனிநான்சொல்லும்சொல்லில்மழலைக்கிளி
உன்நெஞ்சில்ஆடும்பருவக்கொடி..(இன்பமே)
சர்க்கரைப்பந்தல்நான்தேன்மழைசிந்தவா
சந்தனமேடையும்இங்கேசாகசநாடகம்எங்கே
தேனொடுபால்தரும்செவ்விளனீர்களை
ஓரிருவாழைகள்தாங்கும்
தேவதைபோல்எழில்மேவிடநீவர
நாளும்என்மனம்ஏங்கும்(இன்பமே)
பஞ்சணைவேண்டுமோநெஞ்சணைபோதுமே
கைவிரல்ஓவியம்காண
காலையில்பூமுகம்நாண
பொன்னொளிசிந்திடும்மெல்லியதீபத்தில்
போரிடும்மேனிகள்துள்ள
புன்னகையோடொருகண்தரும்ஜாடையில்
பேசும்மந்திரம்என்ன(இன்பமே)
மல்லிகைத்தோட்டமோவெண்பனிக்கூட்டமோ
மாமலைமேல்விளையாடும்
மார்பினில்பூந்துகிலாடும்
மங்களவாத்தியம்பொங்கிடும்ஓசையில்
மேகமும்வாழ்த்திசைபாடும்
மாளிகைவாசலில்ஆடியதோரணம்
வானவீதியில்ஆடும்(இன்பமே)
கவிதை ஒன்று கால் முளைத்து காதல் பாட்டுப் பாடுதோ? எழுதும் ஒவ்வொரு சொல்லுமே ஏகாந்தம் சொல்லுதோ? எங்கே இரண்டு இதயங்கள் அன்பில் இணைந்தாலும் அங்கே இந்தப் பாடல் இன்பம் சேர்க்குமே! இளமை குலுங்கும் இனிமை ததும்பும் இதயம் தழுவும் பாடலே!