அழகு தெய்வம் மெல்ல… மெல்ல…
—கவிஞர் காவிரிமைந்தன்.
காதலிலே கடிதம் என்பது இன்ப ஊற்று! – இப்படி எழுதப்பட்டால்..
காதலிக்கு மடல் தீட்டுவதென்பது – ஒரு சாதாரண மனிதனையும் கவிஞனாக்கும் படலம்! மடை திறந்த வெள்ளம் பெருகிவர வார்த்தை நதி ஓடிவருகிறதே.. அவள் உள்ளம் தொட!! இந்தப் பகீரத முயற்சி – பலபேரை கவி எழுத வைத்திருக்கிறது எனவேதான்.. கவிஞர்கள் பிறப்பது காதலில் என்பார்கள்!
‘பேசும் தெய்வம்’ என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்த மடலிது! இசைவடிவம் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.. தனக்கே உரித்தான பாவங்களுடன் பாடிக் கொடுத்திருக்கிறார் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன்!!
http://youtu.be/R12D7i5PWGQ
காணொளி:-http://youtu.be/R12D7i5PWGQ
பாடல்: அழகு தெய்வம் மெல்ல மெல்ல்
திரைப்படம்: பேசும் தெய்வம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் .. பி.சுசீலா..
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1967ஆழியிலே பிறவாத அலைமகளோ? ஆஆ..ஆஅ…ஆ…
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ?
ஊழி நடம் புரியாத மலைமகளோ?
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ? ஆ..ஆ..ஆ..ஆஆஆ…அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?ஆ…ஆ..ஆ…ஆ..
இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல ஆஆ…ஆஅ..
இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
ஆ…ஆ..ஆ…ஆ.அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?ஆஅ..ஆ..ஆ.ஆஅ..
தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ?
தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ?
தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ? ஆஆஆஆ..
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ?
ஆஆஆஆ..அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? – நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
எத்தனையோ கவிஞர்கள் எழுதிக் கொண்டிருப்பது இந்தக் காதல் மடல்கள்! ஆனால் கவிஞர் வாலி வரைந்திருப்பதோ காதல் கடல்! மிக மிக எளிமையான பதங்கள் கொண்டு கவிதை விருந்தையல்லவா வழங்கியிருக்கிறார். முத்துக்களின் அணிவரிசை! முழுநிலாவின் கோலமிது! கற்பனை அணிவகுத்து கவிதைப் பண்பாடுது! இசையும் குரலும் ஏற்றதொரு பாத்திரங்களில் நடிகர்திலகமும் நாட்டியப் பேரொளியும்..
கேளுங்கள்.. மீண்டும் ஒருமுறை இன்பலஹரியில் இதயம் மூழ்கட்டும்!!