மேரே நாம் அப்துல் ரஹ்மான் …
— கவிஞர் காவிரி மைந்தன்.
திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்கிற பழமொழியை தலையில் ஏற்றி பலத் தலைமுறைகளாக ஏற்றம்பெற்று வளர்கின்ற குடியில் வந்துதித்த திருப் பெயரே.. அப்துல் ரஹ்மானாம்! நவரத்தினங்கள் முதலாக தங்க வணிகத்திலும் தழைத்தோங்கிய குடும்பத்தில் பிறந்தவர் இவர்! கீழக்கரை என்று சொன்னால்.. அதன் மேலத் தெரு நினைவில் வர.. அதில் வாழும் கனவான்கள் – பொருள் தேடி கடல்கடந்து ஈட்டிய பெரும்செல்வம் கீழக்கரை பெயரதனைக் காலமெல்லாம் சொல்லும்! சொல்லும்!!
வளைகுடா நாடுகளில் வசீகரிக்கும் நாடான துபாயில் ஈ.டி.ஏ. நிறுவனமும் இவர்தம் இனியபெயரை என்றென்றும் உரக்கவே உச்சரிக்கும்! அறுபது ஆயிரத்திற்கும் மேலான பணியாளர்களைக் கொண்டு குறிப்பாக தமிழர்களுக்கு இடம் தந்து ஆலமரமாய் விரிவு பெற்று விளங்கும் நிறுவனத்திற்கு வித்தூன்றி.. விளைய வைத்து விந்தை புரிந்த பெருமகனார்! இவரோடு தோளோடு தோள் நின்று தன் கூறிய மதியால் வளர்ச்சிக்கு வழிவகுத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனக் குழுமத்தை நடத்திவந்த மேலாண்மை இயக்குனர் திருமிகு. சையது எம். சலாவுதீன் ஆகிய இருவரும் வாழுகின்ற வரலாறாய் திகழ்கின்றனர்.
மக்கள் திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு. ஒரு முறை தான் நடித்து வெளியான சிரித்து வாழ வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்து, ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள.. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை.. டி எம். சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்.. ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
எம்.ஜி.ஆர். திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா? பகுத் அச்சா என்பதைவிட!! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.
நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!
http://youtu.be/3FEOtAlu7Mo
காணொளி: http://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo
பாடல்: புலமைப்பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு: எம். ஜி. ஆர்.
பாடியவர்: டி. எம்.எஸ்.
படம்: சிரித்து வாழ வேண்டும்எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்உள்ளகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான் !