மல்லிகை என் மன்னன் மயங்கும் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை, ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு! வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை! எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ….
கவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு! ஏழிசை ஸ்வரங்கள் என்றால் அந்த ஸ்வரங்களாகவே வாழும் திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல்! மயக்கும் பாடல்! மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே! கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று! ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்!
காணொளி: http://www.youtube.com/watch?v=OXb-MnTstR0
பாடல்: கவிஞர் வாலி
திரைப்படம்: தீர்க்க சுமங்கலி (1974)
இசை: M S விஸ்வனாதன்
குரல்: வாணி ஜெயராம்
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோவான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ் வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோபொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெல்லம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ