-ரா. பார்த்தசாரதி

தீமை செய்த காளிங்கன்மேல் நடனம் புரிந்தாய்!    krishna_arjuna
வெண்ணை திருடும் கள்வனாய்த் திரிந்தாய் !

இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர்குலத்தினைக் காத்தாய் !
அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !

கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்தாய் !
பெற்றவளையும், வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்குத் தூதுவனாய்ச் சென்றாய் !
துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !

போரே முடிவானதும் பாண்டவர்பக்கம் துணை இருந்தாய் !
போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

தர்மத்தினால்  பாண்டவர்களைப் போரில் வெற்றிபெறச் செய்தாய் !
அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!

ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடந்திடச் செய்தாய் !
ஜடவரதன் அம்புபட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *