ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் …
ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் …
அன்பை வாங்கிட எவரும் இல்லை!!!????
ஜீவராசிகள் முதல் மானுடவர்க்கம்வரை வகை வகையான உயிரினங்கள், இயற்கை வளங்கள் முதல் விண்மீன்களென பால்வீதியையும் படைத்தவன்.. விநோதமாக இருக்குமிடம் தெரியாமல் தானிருந்து ஆட்டுவிக்கும் நாடகமே இவ்வாழ்க்கை! இதில் ஏற்றுள்ள பாத்திரங்களை இயல்பாக நடிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் மர்ம முடிச்சுக்கள் இடப்பட்டிருக்கின்றன! மேலும் இதயத்தையும் மூளையையும் சம்பந்தப்படுத்தி – மனம் என்கிற கடலையும் மனிதனுக்குள் படைத்துவிட்டான்! ஆசையெனும் அலைகளில் தனக்குள்தானே சிக்கி எவன் ஒருவர் மீள்கிறானோ எங்கே பார்க்கலாம்.. எனும் விசித்திர விளையாட்டை தினசரி நடத்துவிக்கும் சூத்திரதாரி இறைவன்!
அவன் படைத்த உலகமிது என்பதை அழகழகாய் வரியமைத்து வாலி தந்த பாடலிது! அவரவர் ஆசை என்னவென்று ஆங்கோர் பட்டியலிட்டு அன்பினை வாங்கிட எவருமில்லை எனும் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்! எண்ணரதமேறி.. எழுத்துப் படை நடத்தி ஈட்டிடும் வெற்றிகளில்தான் இதுபோன்ற தத்துவ தரிசனங்கள் தாமாக வந்து விழும்! அத்தகைய பாடலிது! சுட்டிக்காட்டிய நண்பர் ஷேக் சிந்தா மதார் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாக்குகின்றேன்!
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வாலியின் வைர வரிகள்.. திரைப் படம் ‘டில்லி மாப்பிள்ளை’ பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்!!.
http://youtu.be/lN_4hTXIG9A
காணொளி: http://youtu.be/lN_4hTXIG9A
படம்: டில்லி மாப்பிள்ளை
பாடல்: வாலி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: டி. எம். எஸ்.ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை