இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (41)

 

கூ சிக்கூ!

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

images (1)
கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ! ஆஹா
கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ!

கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் கொஞ்சம் கட்டிக்கொள்ளுவதும் கூசிக்கூ
கண்ணிமைக்கும் நேரத்தினில் சின்ன முத்தம் தருவது கூசிக்கூ
கண்ணும் கண்ணும் உண்ணுவது கூசிக்கூ
நெஞ்சை நெஞ்சம் கெஞ்சுவது கூசிக்கூ
அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு அங்கே இங்கே கிள்ளிக்கொண்டு
அப்பாவி போலமுகம் அழகு காட்டுவது (கூச்சிக்கூ!)

இரவினில் நடந்தது பகலிலும் தொடர்வது கூசிக்கூ, ஆஹா
விளிம்பினில் ததும்பி வழிந்திடும் மதுவே கூசிக்கூ
வயதுகள் தொலைவது கூசிக்கூ
காலம் இடம் மறப்பது கூசிக்கூ
இந்தக்கணம் மிகநிஜம் இந்தசுகம் நிரந்தரம்
என்றுவந்த சொந்தமொன்றில் சொர்க்கம் மயங்குவது (கூச்சிக்கூ!)

நெஞ்சிலுள்ள நரம்புகள் அத்தனையும் யாரோ
வீணை மீட்டுவது கூசிக்கூ
கொஞ்சலென்னும் மொழியில் கோடிக்கோடிக் கவிதை
கொட்டித் தீர்ப்பதே கூசிக்கூ
சின்னச்சின்ன முத்தச்சத்தம் கூசிக்கூ
முனகி மயங்குவது கூசிக்கூ
உன்னையன்றி யாருமில்லை நம்மையன்றி ஏதுமில்லை
என்றவொரு வாசகத்தைத் திக்கித்திக்கிப் பேசுவது கூசிக்கூ

நீ
சொல்லித் தந்த மந்திரம் கூசிக்கூ, நெஞ்சைக்
கொஞ்சும் கண்ணின் தந்திரம் கூசிக்கூ
காதலென்னும் போதையினில் காலமின்றி வாழுவதும்
நட்டநடு அம்பலத்தில் ரகசியமானது கூசிக்கூ!

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.