தென்றல் உறங்கிய போதும்…!
-கவிஞர் காவிரிமைந்தன்
’பெற்ற மகனை விற்ற அன்னை’ என்பது திரைப்படம். எதுகை மோனையுடன் தலைப்பைச் சூட்டியிருக்கும் இயக்குனருக்குக் கவித்துவ ஈடுபாடு அதிகம்போலும்! மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்!
தாலாட்டுப் பாடல்போல இசையும் கவிதையும் காட்சி தந்த போதிலும் இது ஒரு காதல் பாடல் என்பதில் மாற்றமில்லை! எத்தனை முறை இந்தப் பாடலைக்கேட்டிருப்போம் என்கிற கணக்கு மட்டும் என் வசம் இல்லை! அத்தனை முறை கேட்கும்போதும் இசையின்பம் பொழிய…இனிய குரல்கள் செவியில் வந்து மோதிய அதிசயம் நடந்துகொண்டுதானிருக்கிறது!
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும்… என்று ஒரு அதீதக் கற்பனையை எழுப்பி அதைப் பல்லவியாக்கி… கவிஞர் கானமழை பொழியக் கவிதையொன்றை யாத்திருக்கிறார். செந்தமிழில் தோய்ந்த வார்த்தைகள் சிங்காரமாய்க் கண்சிமிட்ட … பொருள் பொதிந்த பாடலாய் காதலைக் கண்முன்னே காட்டுவதில் வெற்றி மேல் வெற்றியே!
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
திரைப்படத்தின் தலைப்பைப் போலவே தாள ஜதி சொல்லும் வண்ணம் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் மறுக்க முடியுமா?
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
பாடியவர்கள்: A.M. ராஜா, P. சுசீலா
பாடலாசிரியர்: மருதகாசி
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே…வந்தபோதிலே
நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
ஆ…ஆ….ஆ…ஆ…….
இதய வானிலே இன்பக் கனவு கோடியே …கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே…ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
இந்த பாடலை காப்பி அடித்து பாலிவுட்டில் பாத்ஷா என்ற ராப் பாடகர் லால் கெந்தா பூஃல் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.