”ஹெல்த் டைம்” – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் காலை 11.00 மணிக்கு ”ஹெல்த் டைம்” என்ற நிகழ்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்ந்த மருத்துவ நிபுணர் கலந்து கொண்டு உரையாடுகிறார்.
நவீன கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் மனிதனின் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வில்லா உழைப்பு, திட்டமிடப்படாத வாழ்வு முறை, ஆரோக்கியம் அற்ற உணவு முறை ஆகியவற்றால் மன உளைச்சலுக்கும் உடல் நலக் குறைவிற்கும் ஆட்படும் மனிதனுக்கு அரிய வரப்பிரசாதமாக இருக்கிறது இந்நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் மனிதனை தாக்கும் நோய்கள் அதற்கான அறிகுறிகள், காரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் தகுந்த விளக்கங்கள் படக்காட்சிகளோடு விளக்கப்படுவதால் சாதாரண மனிதர்களும் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.