அம்மானை அழகுமிகும் கண்மானை
காவிரி மைந்தன்
தமிழ் இலக்கியத்தில் அம்மானை என்கிற விளையாட்டு அதுவும் பெண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு மிகவும் பிரபலம்! தோழியரிடையே போட்டிகள் நடக்கும்! அறிவும் இதிலே இணைந்து சிரிக்கும்! கவிதைநயமும் இருபொருள்படும்படி சிலேடை நயமும் எனத் துள்ளிவரும் என்பதால் ஆடுவோர் மட்டுமின்றி ஆட்டத்தை ரசிப்பவர்களும் சுவை பெறுகின்ற விளையாட்டாகும்!
இதுவே பிற்காலத்தில் புதிர் விடுவிக்கும் போட்டியாக மாறியது என்று கூட தோன்றுகிறது! புதிர் விடுவிப்பதில் ஆண்களும் பெண்களும் கலந்து பங்கேற்பது அம்மானை ஆட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்!
அவன் ஒரு சரித்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிகை மஞ்சுளா திரையில் தோன்ற பின்னணி குரல்களாக டி.எம்.செளந்திரராஜன், வாணி ஜெயராம்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் முழங்கும் காதல் பாடல்! நாகரீக வார்த்தைகள் மட்டுமின்றி சங்கத்தமிழ் இன்பத்தமிழாக வழிகிறது பாருங்கள்!!
வண்ணத்தமிழில் காதல்கனிரசம் கொட்டுகிற பாடலிது! கவியரசு கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல்களில் இலக்கிய நயங்கள் மிளிருகின்ற பாடல்களில் இது முக்கிய இடம்வகிக்கிறது! அன்பின் பரிமாணம் அழகுடன் சங்கமிக்கும் இருவரின் உள்ளங்களும் ஒன்றெனக் கலந்திருக்க.. இன்பராஜ்ஜியத்தில் இசையல்லவா மீட்டியெடுக்கிறது!
இயற்கை எழில்கொஞ்சும் சூழல்களில் இதயம்குளிர்விக்கும் பாடல் கேட்க இந்தப் பாடலைக் கேட்கலாமே!
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
மங்கலச் சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
http://www.youtube.com/watch?v=RMqFp9rzqVM