தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே

0

–கவிஞர் காவிரிமைந்தன்.

 

vanambadi

வானம்பாடி திரைப்படம் என்பது என்னைப்பொறுத்தவரை கண்ணதாசன் நடத்திய பாட்டுக் கோலாகலம்! படத்திலும் கதையின் நாயகன் நாயகி இருவருக்கும் கவிதை மீது பற்று உண்டு என்று கதையைக் கொண்டு சென்று தன் மனத்தில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் பாட்டுவரிகளாய் மாற்றிய திறம் கவிஞருக்கே உரியதாகும்!

கதையின் களம், நாயக நாயகியர் தேர்வுகள் என்று எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தக் கதைக்கு இதைவிட பொருத்தம் யாராக இருக்க முடியும் என்று தோன்றுமளவிற்கு கனகச்சிதமாக, திரையில் தேவிகாவும் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும்…

இசை என்பது பின்னணிதான் ஆனால் இந்தத்திரைப்படத்தில் அது முன்னணியில் ஜொலிக்கிறது! ஆம் … திரையிசைத்திலகம் என்றழைக்கப்படும் மாமா அவர்களின் முத்திரைகள் பளிச்… பளிச் ரகம்! கேமரா மேன் விட்டல்ராவ் ஒளிப்பதிவில், வானம்பாடி இன்னும் நம் மனத்திரைகளில்!!

கதாநாயகி இரட்டைவேடமேற்று சுவாரஸ்யத்தைக் கூட்டிச் செல்லும் திரைக்கதையில், ஒரு முக்கியக் கட்டத்தில் … பாடகியாய் பரிணமிக்கும் தேவிகா அவர்கள் பாடும் ஒரு பாடலாய் ஒளிப்பதிவுக்கூடமதில் இடம்பெறும் பாட்டு! சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் மெல்லிசை மன்னர் தன் குழுவினருடன் தோன்றி நடித்த பாடல்கள் நம் மனதில் நிலைபெற்றிருப்பதைப் போல கே.வி.மகாதேவன் தன் குழுவினருடன் தோன்றிய அபூர்வமான பாடல்!

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்கிற பல்லவியுடன் துவங்கும் பாடலுக்கு அர்த்தங்களை அறிந்தபோது வியந்துபோனது எப்படியோ… அப்படித்தான்… இதோஇந்தப் பாடலுக்கும் அர்த்தங்கள் நிச்சயமாக இருக்கும்… அது என்ன… என்ன? என்கிற வினாவிற்கு விடை இன்றுவரை கிடைக்கவில்லை..

அன்புநண்பர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள் தந்த செய்திகளைப் பாருங்கள்…

Bird...In HINDU Metroplus today, there is an article on Thookkanangkuruvi called Baya weaving bird in English. I was indeed amazed to learn the bird’s nesting methods. The male bird weaves the hanging nests which come with heat-shield mechanisms and security checks. The female bird inspects these nests midway during the construction of the nests and the female bird accepts the male bird’s love or advances only if she is satisfied with the nest and its location. Once this romantic bond is struck, the male bird goes on to complete the nest and the couple lives and breeds happily thereafter. When female birds reject the nests, some male birds sometimes even tear up the nest in frustration, say birdwatchers.

I was reminded of our Thookkanaangkuruvi song and does Kannadasan somewhere in the song touches this point in the song? If it is so, my admiration for the kavignar will multiply manifold.

Just go thro the song and if possible you can include the song in PPPK covering this point.

K Sundar.

எத்தனை சாதுர்யமாக இத்தனை கருத்துக்களைச் சுமந்து ஒரு பாடல் பிறக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தால்… யுகக்கவிஞர்களின் கற்பனைவளத்தில் மட்டும்தான் வார்த்தைகளுக்கு ஆழமிருப்பதையும்… அவை பிற்காலத் தலைமுறைகளால் கண்டெடுக்கப்படுவதும் சாத்தியமாகத் தோன்றுகிறது.

தூக்கணாங்குருவி என்னும் ரகக் குருவி தான் கட்டும் கூட்டில் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வண்ணமும் பாதுகாப்பான குடிலாகவும் உருவாக்கிவரும் கட்டத்தில் பெண்குருவி அங்கே வந்து பார்வையிடுமாம். அவ்வகையில் பெண்குருவி திருப்தியுற்றால்மட்டுமே கூடு கட்டும் பணி தொடருமாம். அது நிறைவுற்றபின் கூடிவாழும் குருவிகள் அக்கூட்டில் இன்பமாக வாழுமாம். மாறாக பெண்குருவி அந்தக் கூட்டை ஏற்கவில்லையென்றால் ஆண்குருவியே அக்கூட்டைக் கோபமாக கலைத்துவிடுமாம்.

தூக்கணாங்குருவி கூடு உருவாக்கம், அதில் உள்ள அர்த்த புஷ்பங்கள், இவற்றையெல்லாம் கவிஞர் எங்கோ படித்திருக்க… அதை இப்பாடலில் இசையோடு இணைந்த கவிதையாக, திரைக்கதையோடு பவனி வரச் செய்திருக்கிறார். நான் இப்போதும் சொல்கிறேன் இப்பாடலுக்கு இன்னும் இன்னும் அர்த்தங்கள் இருக்கிறது என்று தோன்றுகிறது. அறிந்தவர் எவரேனும் அறியத் தருவீராக என்கிற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன்…

காணொளி : https://youtu.be/fF_P01DOlbI

 

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

பாக்கிறான் பூமுகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்போ தெரியல
[தூக்கணாங்குருவி கூடு]

அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா..
கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
[தூக்கணாங்குருவி கூடு]

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப்போட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு
அத விட்டு …
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

______________________

படம்: வானம்பாடி
பாடல்: கண்ணதாசன்
இசை: கே. வி. மகாதேவன்
குரல்: பி. சுசீலா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.