மன்மத ஆண்டே வருக!
-சரஸ்வதி ராசேந்திரன்
மன்மத ஆண்டே வருக!
மண்குளிர மழை தருக!
பைந்தமிழ்ச் சித்திரை வருக!
பொய்கைவளர் பூ விரிய!
வசந்தகால வரவே வருக!
இசைந்து நல்வளம் தருக!
சித்திரைப் பெண்ணே வருக!
சிறப்பை நல்கி அருள் தருக!
வேப்பம்பூக் கொத்தாய்க் குலுங்க
மாமரம் பூத்துச் சிரிக்க
இளவேனிற் காலமே வருக!
இன்பங்கள் கொண்டு வருக!
லஞ்ச லாவணயம் ஒழிந்து
பஞ்சம் பசி நீங்கிப்
பொய்மைகள் தகர்ந்துபோய்ப்
பூக்கட்டும் புதிய வருடம்!
பொங்கிச் செழிக்கட்டும் பூமி!
எனது புத்தாண்டு கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி–சரஸ்வதி ராசேந்திரன்