-பத்மநாபபுரம் அரவிந்தன்
எழுந்து விழும் அலைகளில்
ஏழாமலை ஆணலை 
ஆறு பெண்ணலைகள் தொடர்ந்து
மீண்டுமொரு ஆணலை…
ஆணலை வீரியம்
பெண்ணலை சற்றே அமைதி
இதுதான் கடலலை கணக்கு!
‘அலைகளில் கூட இப்படியா?’
என்றென் கேள்விக்கு
அவர் சொன்னார்…
மனிதர்கள் கணக்கில்
வீரியம்… அமைதியில்
பெருமாற்றம் உண்டென்று…

Leave a Reply