ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

தமிழ் இனிமையான மொழி என்பதை காலங்காலமாக கவிதைகள்தான் பறைசாற்றுகின்றன! இனிக்க வைக்கும் இவர்களின் படைப்புகளில் நம் இதயங்கள் மூழ்கித்தான் போகின்றன! அடுக்குமொழிச் சொற்களும் அவற்றுள் ததும்பும் இன்பமும் இன்னும் வேண்டும் என்றே கேட்க வைக்கின்றன. திரைப்படப் பாடலாசிரியர்கள் அவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பணியைச் செவ்வனே செய்துவருகிறார்கள். மக்களைச் சென்றடையும் ஊடகங்களில் முதன்மை வகிப்பது திரைப்படங்கள் என்கிற பட்சத்தில் இவர்கள் பங்களிப்பு அதன் வெற்றிக்கு மட்டுமல்ல, நம் செவிகளுக்கும் மனதிற்கும்தானே!!

AAYIRAM KANNUKKUஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் பாடலும் இசையும் கைகோர்த்து நடைபோடும், நாட்டியமாடும், நம்மையும் ஈர்த்துவிடும்! கேட்கும்போதெல்லாம் மனம் தாளமிடும்! கால்களும்கூட அபிநயிக்கும். இந்தக் குற்றாலத் தென்றல் கும்மாளமிடும்போதெல்லாம் குளிர்ந்துவிடுகிறதே மனம்! அதுவும் நமக்குப் பிடித்த நாயகன், நாயகி திரையில் தோன்றிவிட்டால் இந்த சந்தோஷம் ஆனந்தநதியில் சங்கமிக்கும்! உதடுகள் பல்லவியை உச்சரிக்கும்! சரணத்தில் கொஞ்சம் சஞ்சரிக்கும்! கற்பனைதான் இங்கே தலைமைவகித்தாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்!

ஒருதாய் மக்கள் என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகள் தொட்டுக்காட்டும் இன்பங்கள் ஒன்றல்ல. பொதுவாக நாயகன் நாயகியை நோக்கி நாயகிக்காகவே பாடுவான். ஆனால், இப்பாடலில் ஒரு புதுமையைக் காணலாம். ஆம், நாயகன் தான் பாடினாலும் நாயகிக்கு வரவிருக்கும் காதலன் குறித்து நாயகிக்கு எடுத்துரைக்கும் வரிகளாக, பதுக்கிவைத்த இன்பங்களைப் பட்டியலிட்டுப் போட்டுக் காட்ட, அவள் தனக்காகவே பாடுகிறான் என்று குதூகலிக்கும்போது, உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான், அது நானல்ல, அது நானல்ல, என்று சொல்ல… அட! இப்படி ஒரு பாடல் இதுவரை நாம் கேட்டதில்லையே என்கிற உணர்வு வருகிறது!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைக்க, ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரல் கொடுக்க இதோ அந்த இன்பநதி ஓடிவருகிறது! நம் உள்ளங்கள் மகிழ! புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்​, திரையில் தோன்றிடும் நட்சத்திரங்களாக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா.

 **********AAYIRAM KANNUKKU-1

காணொளி: டி. எம். எஸ். குரலில்
https://youtu.be/shWARw7nirI

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

உன் கை வளை ஓசையில்
கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில்
விழுந்திருப்பான்
உன்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான்
எந்தன் குறை தீர
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

உன் பாதத்தில் தலை வைத்து
படுத்திருப்பான்
கண் பாவத்தில்
காவியம் படித்திருப்பான்
உன்னை சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
பின்பு துடிக்க வைப்பான்
நெஞ்சம் சுகமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

நல் ஆரம்ப நேரத்தை
வரவு வைப்பான்
தன் அனுபவ ஞானத்தை
செலவழிப்பான்
மலர் அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
இன்னும் சொல்லிக் கொடுப்பான்
இன்பம் சமமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல

 **********


AAYIRAM KANNUKKU-2

காணொளி: பி. சுசீலா குரலில்
https://youtu.be/2p12GCKjlqU

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

என் கை வளை ஓசையில்
கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில்
விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான்
எந்தன் குறை தீர
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ

என் பாதத்தில் தலை வைத்து
படுத்திருப்பான்
கண் பாவத்தில்
காவியம் படித்திருப்பான்
என்னை சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
பின்பு துடிக்க வைப்பான்
நெஞ்சம் சுகமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

நல் ஆரம்ப நேரத்தை
வரவு வைப்பான்
தன் அனுபவ ஞானத்தை
செலவழிப்பான்
மலர் அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
இன்னும் சொல்லிக் கொடுப்பான்
இன்பம் சமமாக
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

**********


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *