நடிகனின் வாழ்கை – ’நாடகம் ’
திரு. ஒய். ஜி. மகேந்திரன் அவர்களின் “நாடகம்” என்கிற நாடகத்தின் தொடக்கவிழா, ஆகஸ்ட் 6, 2011, அன்று, இராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
இந்த நாடகமானது ஒரு மேடை நாடக நடிகருடைய வாழ்கையைத் தழுவி அதாவது, 1975-ல் சின்னத்திரையில் ஆரம்பித்து இன்றைய நாள் வரை ஒவ்வொரு காட்சியும் மனதை மிகவும் கவரும் வகையில் இருந்தது.
அப்பொழுது சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருமதி. மதுவந்தி அருண் அவர்கள் தனது அறிவுப்பூர்வமான உரையால் இந்நாடகத்தை வர்ணித்தார். இவருடைய இந்தப் பேச்சானது மிகவும் இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தது.
இந்நாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமாகக் கையாளப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் படைப்பானது பார்ப்போரின் மனதை நெகிழ வைக்கக்கூடியதாக இருந்தது. இறுதிக் காட்சியில் வந்த வாஞ்சிநாதன் கதாபாத்திரம் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது என்றார்.
இந்த நேரத்தில் தனது இரண்டு கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். முதலாவதாக, எதிர்காலத்தில் தமிழ் மேடை நாடகத்திற்கு அழிவு என்பதே கிடையாது. இரண்டாவதாக, ஒரு மேடைநாடக நடிகன், தான் மேடையிலேயே இறப்பதை பெருமையாக நினைக்கிறான் என்றும் தனது உரையில் கூறினார்.
திரு. ஒய். ஜி. அவர்கள் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் ஒரே நாளில் தனது திறமையால் பலவித கதாபாத்திரங்களைக் கையாண்டு உள்ளார். அவர் தனது திறமையால் இயக்கி, நடித்து எல்லோருடைய மனத்தையும் கவர்ந்துள்ளார்.