விழித்தெழட்டும் என் நாடு!

2

– தேமொழி.

 

 

விழித்தெழட்டும் என் நாடு!

கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர்
மொழிபெயர்ப்பு – தேமொழி

எங்கே அச்சமற்ற மனம்
தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள்
அடங்காமல் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய
மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
ஆழத்தில் இருந்து உருவாகிறதோ
எங்கே சோர்வற்ற கரங்கள்
முழுமைப்படுத்துவதில் முனைகிறதோ
எங்கே தெளிந்த நீரோட்டமான சிந்தனை பாழான
பழக்கம் என்ற பாலை மணலில் மறையவில்லையோ
எங்கே உன்மனம் என்றும் பரந்த மனப்பான்மை
கொண்ட செயல்களை முன்னெடுக்கிறதோ
அந்த விடுதலை என்னும் சொர்க்கத்தில்
என் தந்தையே, என் நாடு விழித்தெழட்டும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

 

இரவீந்திரநாத் தாகூர்

Where The Mind Is Without Fear

– Rabindranath Tagore

“Where the mind is without fear
and the head is held high,
where knowledge is free.
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls.
Where words come out from the depth of truth,
where tireless striving stretches its arms toward perfection.
Where the clear stream of reason has not lost it’s way
into the dreary desert sand of dead habit.
Where the mind is led forward by thee
into ever widening thought and action.
In to that heaven of freedom, my father,
LET MY COUNTRY AWAKE!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “விழித்தெழட்டும் என் நாடு!

 1. தேமொழி,

  இரவீந்திரநாத தாகூர் எழுதிய 103 கீதாஞ்சலிப் பாக்களில் நோபெல் பரிசு அளித்த கீதாஞ்சலிக் கவிதை இதுதான். இதை நான் 1980 இல் மொழிபெயர்த்தேன்.  அது மணியன் வெளியிட்ட “மயன்” வார இதழில் வெளியானது.

  விழித்தெழுக என் தேசம்

  மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

  இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
  எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
  அறிவு வளர்ச்சிக்கு
  எங்கே பூரண
  விடுதலை உள்ளதோ,
  குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
  வெளி உலகின் ஒருமைப்பாடு
  எங்கே உடைபட்டுத்
  துண்டுகளாய்ப்
  போய்விட படவில்லையோ,
  வாய்ச் சொற்கள் எங்கே
  மெய்நெறிகளின்
  அடிப்படையிலிருந்து
  வெளிப்படையாய் வருகின்றனவோ,
  விடாமுயற்சி எங்கே
  தளர்ச்சி யின்றி
  பூரணத்துவம் நோக்கி
  தனது கரங்களை நீட்டுகிறதோ,
  அடிப்படை தேடிச் செல்லும்
  தெளிந்த
  அறிவோட்டம் எங்கே
  பாழடைந்த பழக்கம் என்னும்
  பாலை மணலில்
  வழி தவறிப்
  போய்விட வில்லையோ,
  நோக்கம் விரியவும்,
  ஆக்கவினை புரியவும்
  இதயத்தை எங்கே
  வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
  விடுதலைச் சுவர்க்க பூமியில்
  எந்தன் பிதாவே!
  விழித்தெழுக
  என் தேசம்!

  ***********

 2. உங்களது மொழிபெயர்ப்புக் கவிதையை.  உங்களது கீதாஞ்சலி கவிதை நூலில் படித்த நினைவுள்ளது. மேலதிகத் தகவல்களுக்கும், கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி ஐயா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.