இரங்கல் செய்தி
ஒரு துயரமான செய்தி.
வல்லமை மின்னிதழின் நிறுவனரும், சிறந்த கவிஞரும், தமிழறிஞருமான அன்புச் சகோதரர் திரு அண்ணாகண்ணன் அவர்களின் தந்தையார், தமிழாசிரியர் திருமிகு சீ. குப்புசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணியளவில் கும்பகோணம் நகரில் நடைபெறும்.
வல்லமை நிர்வாகக் குழுவின் தலைவர் திரு அண்ணாகண்ணன் குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தந்தையாரின் ஆன்மா அமைதியுற ஆண்டவனை வேண்டுகின்றேன்.
annaa kannan! ungal thanthaiyaarin maraivu arinthu perithum varunthinen! avar aanmaa iraivanadiyil amaithi adiya piraarththikkiren! pulavar iraamamoorthy.