-மீ.விசுவநாதன்

பொதிய மலைக்குப் போறேன் – என்
புருசங் கூட நானும்!
அதிக ஆசை இல்ல – சேந்து
அருவி குளிச்சி வாறேன்!

மஞ்சப் பூசி நானும் – அந்த
மதகு நீரில் நிப்பேன்!
பிஞ்சு விரலப் பிடிச்சு – அவர்
பேசச் சிலையா நிப்பேன்!

கடல முட்டாய் வாயில் – வச்சுக்
கடிச்சுக் கடிச்சுத் தருவேன்!
சொடல மாடன் முன்னே – அவர்
சொகத்த வேண்டிக் கிடுவேன்!

ஆத்துத் தண்ணி போல – தேன்
அன்பு சொட்டும் புருசன்!
தோத்துப் போக மாட்டேன் – அவர்
தோளக் கட்டி நடப்பேன்!

ஒண்ணு ரெண்டு புள்ள – அவர்
கொணத்தப் போல பெறுவேன்!
மண்ணு வெளங்க ரெண்டும் – நல்ல
மனுச னாக்கி விடுவேன்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இதுதான் வாழ்க்கை!

  1. இந்தக் கவிதை ஆத்மார்த்தம் என்பதன் விளக்கமாக உள்ளது. மனத்தின் வாசல் சொல்லே என்பதன் இலக்கணமே இக்கவிதை. வரிக்கு வரி ஆழ்ந்த காதலும்
    அசைக்கமுடியாத நம்பிக்கையும் வெளிப்படுகின்றன்.  மீ. விசுவநாதனுக்கு
    மனமார்ந்த பாராட்டு.

  2. Arumai . Yathartham aruviyagakk kotta nanum konjam kavithai manaiviyudan naigiren, en thathayai ninaigiran ! 

  3. அருமை ! பலமுறை படித்து ரசித்தேன்.. உண்மை அன்பின் உருவகம்.. இதுதான் வாழ்க்கை..?? இதுவன்றோ வாழ்க்கை !! ..பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *