எளிமையான தலைவர்!
பவள சங்கரி
இத்தகைய மாமனிதர்களும், அரசியல் தலைவர்களாக வாழ்ந்த புண்ணிய பூமிதான் நம் இந்தியா! நம்புங்கள் நண்பர்களே.. ஆம், நம்ம லால் பகதூர் சாஸ்திரி பற்றித்தான் சொல்கிறேன். சாஸ்திரி அப்போது நேருவின் மந்திரி சபையில் இருந்தார். நம்முடைய அண்டை நாடான நேபாளத்திற்கு ஒரு விழாவிற்காகச் செல்ல வேண்டிய நேரத்தில், நேருவிற்குப் பதிலாக சாஸ்திரியை அனுப்பிவைத்தவர், அது கடுமையான குளிர் காலம் என்பதால் தம்முடைய கோட் ஒன்றை அந்தக் குளிருக்கு அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லி அவரிடம் கொடுத்தனுப்பினார். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாஸ்திரி, அதாவது நேருவின் மறைவிற்குப் பிறகு நம் நாட்டின் பிரதமரானார். அப்போது இலண்டனில் நடந்த காமன்வெல்த் பிரதம மந்திரிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுக்கொண்டிருந்தார் சாஸ்திரி. அவருக்குத் தேவைப்படும் என்பதையறிந்த அவருடைய மனைவி சாஸ்திரி அவர்களுக்கு ஒரு கோட் தைக்க ஏற்பாடு செய்தார். இதையறிந்த சாஸ்திரி அதை மறுத்துவிட்டு நேரு பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கொடுத்த அதே கோட்டை தன்னுடைய அப்போதைய அளவிற்கு சரிசெய்து தரும்படி தையற்காரரிடம் சொல்லி, சரிசெய்த பின்பு அந்தக் கோட்டையே இலண்டன் மாநாட்டிற்கு அணிந்து சென்றாராம்!
மிக அருமையான எளிமையான மனிதர் . இவரை நினைக்கும் போது
மனம் வருந்தவே செய்யும்.இனி இவர் போல் உண்டோ.