பயனுள்ள மருத்துவக்குறிப்புகள் (தொகுப்பு – 2)

புவனா கோவிந்த்.

பொதுவான மருத்துவக்குறிப்புகள்.

சர்க்கரை, டி.பி, கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். ஆகவே எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில், உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

நடு இரவு அல்லது பயண நேரங்களில், திடீரென காய்ச்சல் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை என்று வைத்துக்கொள்வோம். அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருக்கும்போதோ அல்லது பயணத்தின் இடையிலோ, பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

காதுகளை வாரம் இருமுறை, மெல்லிய பருத்தித் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, வளைவான கொண்டை ஊசிகள், காது துடைப்பான்கள்(பட்ஸ்) போன்றவற்றை அழுக்கு நீக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் துடைப்பான்களை(பட்ஸை) உபயோகப்படுத்தும்போது, திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

வயிற்றுப்போக்கிலிருந்து விடுபட உடனடி உபாயம்,  வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான். அதேபோல்,சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல் இருந்தால்,  சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும். நெஞ்செரிச்சல் ஓடிப்போய் விடும்.

வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய்த் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு தம்ளர் தண்ணீராவது அருந்துவது உடலுக்கும், சிறு நீரகத்துக்கும் நல்லது.

உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் பருவத்தில் இருக்கும் பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல், உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும். ஆகவே அதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தல், நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை மலச்சிக்கலை தவிர்க்க உதவும். கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

 

படத்துக்கு நன்றி..

 

 

1 thought on “பயனுள்ள மருத்துவக்குறிப்புகள் (தொகுப்பு – 2)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க