புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
என் ஆசிரியர் திரு ஔவை துரைசாமிப்பிள்ளையவரின் புதல்வர் திரு ஔவை நடராசன். அவர் தங்கை என் மாணவி.
நான் முதுகலைப்படிப்பில் நுழைந்த காலத்தில் நடராசன் அவர்கள் இளநிலை ஆசிரியராக இருந்தது நினைவுக்கு வருகிறது. அவர் எங்களுக்கு வகுப்பெடுக்கவில்லை. ஆனால், தந்தையிடமிருந்து மகனாரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்து! நெடுங்காலம் நலமுடன் வாழ்ந்து தமிழ்ப்பணியைத் தொடர இறைவனை வேண்டுவோம்.
அனுபவித்துக்க் கேட்டேன் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜம்
http://www.letsgrammar.org
http://mytamil-rasikai.blogspot.com
http://viruntu.blogspot.com