நான் அறிந்த சிலம்பு – 209
-மலர் சபா
மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை
பாண்டிமாதேவியின் தீக்கனா
கண்ணகி பாண்டியன் அரண்மனைக்குச் சென்ற
அந்தக் காலைநேரத்தில்
பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி
தான் கண்ட தீய கனவினைப் பற்றி
தோழியிடம் உரைக்கிறாள்.
நம் மன்னனின் குடையும்
செங்கோலும் கீழே விழுந்திட
வாயிலில் உள்ள மணி அசைந்து ஒலித்திட
அந்த ஓசையைக் கனவினில் நான் கேட்டேன்.
நான்கு திசையும் அதிர்ந்திடக் கண்டேன்.
கதிர் ஒளியை இருள்விழுங்கக் கண்டேன்.
இவை யாவும் என் கனவில் கண்டேன்.
கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்
அரசனின் செங்கோலும் வெண்கொற்றக் குடையும்
நிலத்தில் மடங்கி விழும்.
வெற்றிவாயிலில் கட்டிய மணி
என்னுள்ளம் நடுங்கும் வண்ணம் ஒலித்திடும்.
இரவுக்காலம் வானவில்லைத் தோற்றுவிக்கும்.
பகலில் விண்மீன்கள் எரிந்து விழும்.
எட்டுத் திசையும் அதிர்ந்து நிற்கும்.
இதனால் வரக்கூடிய துன்பம் ஒன்று உண்டு.
நான் இதனைப் பற்றி
அரசனிடம் கூற வேண்டும்.
***
படத்துக்கு நன்றி: கூகுள்