கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”படிகார வெண்மை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….
முரளி -வேணுகானம்….
”தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் அப்பயல்முன்
கப்பம்நீ கட்டிடக் காப்பு”….கிரேசி மோகன்….