குடும்ப அட்டையில் , கணவன் – மனைவி இருவரது புகைப்படங்களும் இடம் பெற போராடவேண்டும்.
டு,
ஆசிரியர் அவர்கள்,
வல்லமை – மின்னிதழ்,
சென்னை.
“எழுகிறது மகளிர் சக்தி!” – உண்மைதான் அன்றே சொன்னார்கள் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று. அது எந்த அளவிற்கு உண்மை என்பது எப்போது நாம் உணர்கிறோம்? கடந்த தேர்தலில் மகளிர் அதிக அளவில் வாக்குகள் அளித்திருப்பததற்கு முக்கிய காரணமே “பெண்களது சுய உதவி குழு”க்களின் செயல்பாடுகளும் அதை தொடர்ந்து தருகின்ற மானிய அறிவிப்புகளும் அதோடு பெண்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களும்தான் முதன்மை வகிக்கிறது. மேலும் சமீப காலமாக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக போட்டி போட்டுகொண்டு முன்னேறி வருவது படித்த பெண்கள் என்றாலும்… படிக்காத கிராமப்புற மற்றும் நகர்புற பெண்களை இந்த மகளிர் சுய உதவிகுழு என்ற பெயரில் வெளி வட்டார பழக்கம் அதிகமாகியதும்,”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்திடும்” விந்தை மனிதர்கள் ஒய்ந்து விட்டதும் தான் காரணமாகும். இந்த மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பது உண்மை என்றாலும், குறிப்பாக இக்குழுக்கள் பெண்களை கடனாளியாக்குவது கிராமப்புறம் மட்டுமல்ல நகர்ப்புறத்திலும் இப்போது அதிகமாகிகொண்டிருக்கிறது என்பது கண்கூடான உண்மை. இதற்க்கு கூட காரணம் ஒரு சில பெண்ககள் தங்களது அளவுக்கு அதிகமான தேவையினால் தான்.
ஒரு பெண், ஒரு மகளிர் குழுவில் மட்டுமே உறுப்பினராக இருக்க இயலும் என்பது மகளிர் குழுக்களின் விதி. அனால், சிலர் தங்களது தேவைக்கேற்றபடி புதுப்புது குழுக்களை அமைத்து உறுப்பினர்களாக இருக்கின்ற பெண்களே தங்களது திறமைக்கு தகுந்தவாறு உறுப்பினர்களாகி கடன் கொடுத்து கொள்வது கொஞ்சம் மிகையாகவே தெரிகிறது. இப்படி ஒரு சிலர் பல குழுக்களில் நுழைந்து முதலில் கடன் வாங்கும்போது இனிமையாக இருந்தாலும், திருப்பி அந்த கடனை செலுத்தும் நேரத்தில் அவர்கள் படும் சிரமம், பார்க்க பரிதாபமாக உள்ளது. எனவே எந்த ஒரு கட்சியும் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன், இது போன்ற மகளிர்களின் துயரத்தை துடைக்க மகளிர் குழுக்களை வரைமுறையுடன் ஒழுங்கு படுத்த வேண்டும். எந்த ஒரு வீட்டிலும் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நிகழ்கால உண்மை. எனவேதான் இம்முறை பெண்கள் அதிகமாக வந்து வாக்களித்துள்ளர்கள் என்பதும் ஒருவகையில் உண்மை. என்னைக் கேட்டால், இப்போது புதிதாக வழங்கப்பட இருக்கும் குடும்ப அட்டையில் கணவன் மனைவி இருவரது புகைப்படங்களும் இடம்பெறும் வண்ணமாக “குடும்ப அட்டைகள்” வழங்கப்பட்ட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் குடும்ப அட்டையில், கணவன் – மனைவி இருவரது புகைப்படங்களும் இடம் பெற போராடவேண்டும். இது பல நேரங்களில் பொதுவாக… உபயோகமாக இருக்கும் என்பது இன்றைய புதிய தலை முறைகளின் எண்ணம்.
நன்றி.
சித்திரை சிங்கர்
http://swthiumkavithaium.blogspot.com/ இன்று தான் தங்கள்தளம் வருகிறேன். 2013 முதல் வலைதளம் அமைத்துள்ளேன். என் வலை பக்கம் பார்க்கவும். விருது பெற எப்படி மெயில் அனுப்ப வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும்