எளிமை – வலிமை!
பவள சங்கரி
நம் முன்னாள் பிரதமர் உயர்திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இன்று பிறந்த தினம். அவர் சிறுவனாக பள்ளி செல்லும்போது அவரும் நம் இந்தியாவும் மிகவும் ஏழ்மையில் இருந்த காலகட்டம் அப்பொழுது ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலைமை. பாலம் கட்ட வசதியில்லாத நம் பாரத மாதா.. சாஸ்திரிக்கு படகில் செல்ல காசில்லாமல், புத்தகங்களை துணியில் கட்டி தலையில் சுமந்துகொண்டு, ஆற்றில் நீச்சல் அடித்து அன்றாடம் அதே ஈர உடையுடன் பள்ளி செல்வாராம்.. அப்படியெல்லாம் கடினப்பட்டு படித்துதான் சிறந்த அறிவாளியாக நம் நாட்டை வழிநடத்தினார்..