’’பகவான் ஸ்ரீ அரவிந்தர் சித்தி அடைந்த நாள் இன்று டிஸெம்பர் 5….!’’
‘’சாகா வரமுற சாவித் திரியுடன்
யோகா பரிபூர்ணம் எய்தவர் -தேகாபி
மானம் அலிபூர் அறையில் தொலைத்தவர்
ஞான அரவிந்தர் நாள்’’…..கிரேசி மோகன்….!
”புத்திக்(கு) அரவிந்தர், சித்திக்(கு) அரவிந்தர்,
முத்திக்(கு) அரவிந்தர், மூலமாம் -யுக்திக்(கு)
அளித்தார் அவரே அதிமன யோகம்
தெளித்தார் மனதில் தவம்’’….கிரேசி மோகன்….!