காதலெனும் சோலை
-ரா.பார்த்தசாரதி
காதலெனும் சோலையிலே கண்டடெடுத்த ரோஜாவே
காதலனிடம் காதலை வெளிப்படுத்திய ரோஜாவே
காதலெனும் போதையிலே கண் மயங்கும் ராஜாவே
என் மனதை கவர்ந்திடும் இனிய ராஜாவே!
காதலெனும் சோலையில் கானக்குயில் பாடுதே
ஆதியும் அந்தமுமில்லாமல் அமரகீதம் பாடிடுதே
வண்ணமலர்கள் மனதை தென்றல் வாரி வீசிடுதே
கடலாகிய அலைதன்னில் கவிதை பாடி ஓடிடுதே!
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதினிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்வினிலே
கொஞ்சும் சோலைக்குருவி சொந்தம் பேசுமே
குறைவில்லாமலே எல்லா இன்பமும் தருமே!
இரு இதயங்கள் இவ்வுலகில் ஒன்றாகி
என்றும் அழியாமல் காதலாகிக் கசிந்துருகி
கண் மூடும் வேளையிலே கலை என்ன கலையோ
கண்ணே உன் பேரழகிற்கு உலகம் தரும் விலையோ !
உன்னை நினைத்தாலே என் மனம் காதல்கீதம் பாடிடுமே
உன் மதிமுகம் இரவினிலே நன்கு தெரிந்திடுமே
உன்னிடத்தில் என் இதயத்தை தந்துவிட்டேனே
காதலியே
என் இதயத்தைப் பாவை நீயும் எடுத்துச்
சென்றுவிட்டாயே!