திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

’’ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்’’….!
——————————————————

kesav

அவனியைக் காக்க அவதார மாக
நவமியில் வந்தோய் நினக்கு -உவமையாய்
தந்தைதாய் போற்றியொரு தாரத்துடன் வாழ
சிந்தையை ராமா செலுத்து….
அறங்காக்க அன்று குரங்கோடு சென்று
திறங்காட்டிப் பத்தைத் துணித்தோய் -அரங்கேறி
உள்ளூறும் யோக உறக்கத்தில் கண்விழிக்கும்
வள்ளூரின் ராகவா வா….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க