மின்னணுப் பரிமாற்றங்களின் அதிர்ச்சித் தகவல்..
பவள சங்கரி
மின்னணுப்பரிமாற்றங்களை ஊக்குவிக்கின்ற மத்திய அரசு அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிசாரா அமைப்புகளின்றி அனைத்து நிதி மின்னணுப் பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் NSA (National Security Agency) உலகின் அனைத்து வங்கி சேவைகளும் தங்களால் முடக்கப்படும் என்று அறிவித்து சில நாட்களுக்குள்ளாகவே வங்க தேசத்திலிருந்து 89 மில்லியன் டாலர் பரிவர்த்தனை முறைகேடாகச் செய்யப்பட்டு அது நமது இந்தியாவின், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேர்மன் மற்றும் தேசிய வங்கித்துறை பாதுகாப்பு ( National Security Advisor) ஆலோசகரும் இணைந்து அந்தத் தொகைக்கு இருமடங்கு சுமாராக 180 மில்லியன் டாலரை மறுபரிவர்த்தனை மூலமாக திரும்பப்பெறச் செய்துள்ளனர். சுமார் 6 நாட்களுக்குள் இந்தத் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. நமது அனைத்து வங்கிகளும், மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசின் நிதி பரிவர்த்தனைகளும் இதுபோன்ற முறைகேடான பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாக்கவும், முறைகேடாக அனைத்து வங்கிக் கணக்குகளும், நிதித்துறைக் கணக்குகளும் முடக்குவதிலிருந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம். வங்கித் துறைகளின் நடவடிக்கைகள் மின்னணுப் பரிமாற்ற வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் கிரைமும் வளர்ச்சியடைகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். சமீபத்தில் சிலிகான் மூலம் வங்கி அட்டைகளின் கணக்கு எண்ணும், பின் நம்பரும் எளிதில் கைப்பற்றக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்னணுப் பரிமாற்றங்கள் பற்றிய முழு பாதுகாப்பும் இன்றைய அத்தியாவசியம் ஆகிறது. ஆறு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகக் கூறினாலும், ஆறு நாட்கள் ஆகியுள்ளதே என்று அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.