புதிய 1 ரூபாய் தாள்?
பவள சங்கரி
ரிசர்வ் வங்கி புதிய 1 ரூபாய் தாள்களை உடனடியாக புழக்கத்திற்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு. 1 ரூபாய்க்கு நம் நாட்டில் இன்று என்ன மதிப்பு இருக்கிறது? சிறு வியாபாரிகள் முதற்கொண்டு, சாலையில் யாசகம் வாங்குபவர்கள்கூட ஒரு ரூபாயை வாங்க மறுப்பது அன்றாட நிகழ்வு. இப்படியிருக்க 1 ரூபாய் தாள் வெளியிட 50 காசுகள் செலவழிப்பது தேவையா? ஒரு டாலர், ஒரு பவுண்ட் என்றால் அதற்கு பல பொருட்கள் வாங்கலாம். நம் நாட்டில் 1 ரூபாய்க்கு சின்ன இனிப்பு மிட்டாய் தவிர வேறு எதுவும் வாங்க முடியாது. இந்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தி ரூபாயின் மதிப்பைக்கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய காலமிது!
இந்திய நாணய உலக மதிப்பீடு தணிந்து நீர்த்துப் போய், ஒரு ரூபாய் ஒரு பைசா மதிப்பானது. பத்து ரூபாய் ஒரு ரூபா மதிப்பானது.
கனடாவில் ஒரு சென்ட் நாணயப் பழக்கம் நீக்கப்பட்டு விட்டது. 5 சென்ட் நாணய மதிப்புக்கு எல்லாத் தொகையும் முழுமையாக்கப்படுகிறது.
சி. ஜெயபாரதன்