உண்மையான சமத்துவபுரங்கள்…!

2

டு

ஆசிரியர் குழு,

வல்லமை – மின்னிதழ்

இந்தியா

நமது நாட்டில் எல்லா இடங்களிலும் பள்ளிகள்/கல்லூரிகள் மற்றும் வேலை வாய்ப்பு என்று பலவிதத்திலும் இட ஒதுக்கீடு… குறிப்பிட்ட சாதியினருக்கு இத்தனை சதவிகிதம் என்ற நிலையில் உதவும் அரசு, மாற்று திறனாளிகளுக்குக் கூட தேசிய விருது மற்றும் திருமண உதவித்தொகை…. என்று கொடுக்கப்பட்டு நல்ல விதத்தில் அரசாங்கம் நல்ல செயல்கள் செய்துவருகின்றது என்றாலும், சாதிகள் ஒழிய வேண்டும் அனைவரும் ஒரே சாதி அதில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடுதான் இருக்கவேண்டும் என்று மேடை தோறும் முழங்கும் நமது அரசியல்வாதிகள் யாரும் காதல் திருமணத்துக்கு, அவர்கள் குடும்ப வளர்ச்சிக்கு என்று “சலுகைகளை” வழங்க முன்வந்ததில்லை.  இன்றுவரை…  மனமொத்து காதல் திருமணம் செய்துகொண்டு பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் நல்லவிதமாக வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு என்று… அவர்கள் பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் இருக்க வீடு போன்றவகைளை “ஒதுக்கீடு” முறையில் கொடுத்து உதவினால் அவர்கள் வாழ்க்கை நலமாக அமைய… உயர ….. நன்றாக இருக்கும்.

ஒரே சாதியில் காதலித்து மணமுடிப்பவர்களின் நிலை ஓரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும்.  ஆனால், வேறு சாதியினருக்கிடையில் காதல் பிறந்து கல்யாணம் செய்து கொண்டால் அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள் அதை அனுபவிப்பவர்கள் தான் உணருவார்கள். இதில் கூட “பணம்” தாரளமாக இருக்கும் இடங்களில் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளித்துக்கொண்டு விடுவார்கள்.  அது இல்லாமல் இருவரும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பம் நடத்தும் வீடுகளில் முன்னேற்றம் என்பது கடினமே.  அக்கம்பக்கதவர்களின் இகழ்ச்சியான பேச்சுக்கள்… சொந்தக்காரர்களின் இடி பேச்சுக்கள் இதனால் தைரியமாக வேறு எதிலும் காலெடுத்து வைக்க முடியாத நிலையினை உருவாக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் காதல் திருமணம் புரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு என்று கொஞ்சம் சலுகைகள் வழங்கினால் அவர்கள் வாழ்விலும் வளம் பெற்று வாழ அரசு உதவலாமே.

“சமச்சீர்” கல்விக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிகொண்டிருக்கும் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கருணையுடன் இந்த காதல்மண தம்பதிகளின் வாழ்க்கை “சமச்சீர்” ஆவதற்கு உதவுவார்களா..? சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் காதல் திருமணம் புரிந்து ஒழுங்காக வாழ்க்கை நடத்தும் வசதியில்லாத தம்பதிகளை அங்கு குடிவைத்தால்தான் “சமத்துவபுரம்” என்ற பெயருக்கு பெருமையாக இருக்கும்.  இல்லாத நிலையில் இந்த சமதுவப்புரங்கள் அரசியல்வாதிகளின் பெருமையினை பறைசாற்றுவதாகவே இருக்கும்.

கீதா பாலசுப்ரமணியன்

சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உண்மையான சமத்துவபுரங்கள்…!

  1. /தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது./

    மேலும் காண்க: http://goo.gl/C3s3t

    இது போதாது என்றுதான் சமத்துவபுரத்தில் வீடு கேட்கிறீர்களா?

    தமிழக முதல்வருக்கு இதனை ஒரு மனுவாக அனுப்பலாம். அல்லது, cmcell@tn.gov.in என்ற முகவரிக்கும் எழுதலாம்.

  2. கலப்பு திருமணங்களுக்கு மட்டுமே அரசு உதவிகள் செய்துவருகின்றன…. அதிலும் அரசுஅறிவிக்க பட்ட உட்பிரிவுகளுக்குள் வேறு இருக்க வேண்டும். மற்றைய வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்த “காதல் திருமண தம்பதிகளுக்கு” உதவிட எந்த அரசு உத்தரவும் இல்லை என்று எண்ணுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *