A Ruby – மாணிக்கம்
கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
தமிழாக்கம் : பவள சங்கரி
மலையுச்சியில் கருகுமொரு மலரது,
நொறுங்கியதொரு இருதயத்தின்
வழியுமொருத்துளிக் குருதி,
வெள்ளியாய் ஒளிரும் ஆழ்கடலினூடே
எவருமறியா, தூய்மையானதோர் நிர்வாணத்துளி
மர்மமிகு காலைக் கடலினூடே
புதைந்து கிடக்கிறது.
இரவின் பின் இரவாக
இப்புவியை கனவின் கனவாக்கி
தீச்சுவாலையாக உருக்கொண்டதது.
எவருமாறியா, தூய்மையானதோர் நிர்வாணத் துளி….
மிக அருமையான கருத்தாழமுள்ள சிந்தனை..!