இந்தியா உண்மையான சுதந்திர நாடு

2

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்று வெளிநாட்டவர்கள் எல்லோரும் இன்றுவரை போற்றுகிறார்கள்.  இந்த போற்றுதல்கள் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், பதவியில் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்கள், பணக்காரர்கள், பணமில்லாதவர்கள், அரசியல்வாதிகள் முதல் ஆண்டிகள் வரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்ட வரிகள் உண்மையென்றால், நமது நாடு அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் இன்றுவரை நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற உண்மையான நிலை அகல வேண்டுமானால், லோக்பால் சட்ட மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் மட்டுமல்ல ஜனாதிபதியைக் கூட  கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் கூட நல்லதுதான்!

அதைவிட இனி வருங்காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், முதல் அமைச்சர் போன்ற நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நாடுமுழுவதுமுள்ள.. மாநிலங்களில் உள்ள பொதுமக்களே  நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்.  அப்போதுதான் வருங்காலத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் முதல்வர்களும் உண்மையான மக்கள் ஆதரவுடன் மக்களுக்கு ஆதரவான நல்ல முடிவுகளை யாருடைய கட்டுபாடுகளுக்கும் உட்படாமல்  சுயட்சையாக செயல் பட முடியும் என்பது எனது  எண்ணம்.  அப்போதுதான் “இந்தியா  உண்மையான சுதந்திர நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் என்பது  திண்ணம்.  மேலும், சட்டமன்றங்களையும், பாராளுமன்றங்களையும் அரசியல்வாதிகள் பங்கு போட்டுக்கொண்டு நல்லாட்சி என்ற பெயரில் நாட்டாமை செய்வது போல, உள்ளாட்சி அமைப்புக்களை பொதுநலத்தில் அக்கறையுள்ளவர்கள் மட்டுமே பங்கு போட்டுகொள்ளவேண்டும்.  இவர்களால் மக்களுக்குத் தேவையான அவசியமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அந்த நல்ல திட்டங்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவைகள் ஆளும் அரசால் ஆமோதிக்கப்பட்டு, அறிவிக்கப்படும் திட்டங்களினால் கண்டிப்பாக பொது மக்களுக்கு நல்லதே நிகழும்.  இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் / ஜாதி  கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் நிற்க தேர்தல் அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட வேண்டும்.

அடித்தளம் நன்றாக அமைய வேண்டுமானால், உள்கட்டமைப்பு உறுதியாக இருக்க வேண்டுமென்றால், உள்ளாட்சி அமைப்புக்களில் சுயநலம் இல்லாதவர்கள் பதவிக்கு வர வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்க முடியாத நிலை உருவானால், பொது மக்கள் இந்த உள்ளாட்சி

தேர்தல்களில் கட்சி சார்பற்று பொதுநலன் ஒன்றிணை மட்டுமே முன் வைத்து சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களில் உண்மையில் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.  தேர்ந்தெடுக்கபட்டவர்கள் மக்கள் நலனை முன்வைத்து, தங்கள் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.  அப்போது தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடு என்று அனைவராலும் போற்றப்படும்.

 

சித்திரை சிங்கர்,

சென்னை.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்தியா உண்மையான சுதந்திர நாடு

  1. நீங்கள் சொல்வதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால், பூனைக்கு மணி கட்டுவது எப்படி என்ற வினா எழுகிறது. நல்லவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்று கண்ட கனவுகளில், சாக்ரட்டீஸின் வாதங்கள், Sir Thomas More’s Utopia, Samuel Butler’s Erewohn & James Hilton’s Lost Horizon. not to miss Plato’s Republic. அந்த கனவுகள் நனவுகள் ஆக, தேர்தல் முறைகளை மாற்றுவதை விட மக்களின் விழ்ப்புணர்ச்சி தான் முக்யம். Vigilance is the price of Liberty.

  2. கூட்டணிக்கு வேட்டு வைக்கும் முறை கொண்டு வரப்படல் வேண்டும். உலகில் பல நாடுகளில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப் படுகின்றது. ஆனால் அதில் நாட்டுக்கு நாடு கடைப்பிடிக்கும் முறைகள் வேறுபடுகின்றன. இந்தத் தேர்தல் முறையை நடைமுறைப்படுத்திட , கற்றறிந்தோர் ஓர் முடிவுக்கு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் மால்கம் ஆதிசேஷையா என்ற கல்வி விற்பன்னர் சொன்னவற்றைச் செயல்படுத்தியிருந்தால் கல்வித் துறை உருப்பட்டிருக்கும். கீழ்த்தட்டு மக்களுக்கு மேலானவர்கள் எல்லாம் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறோம். ஆனால் ஒன்றாக இருக்கிறோமா என்பதே கேள்வி? நாம் ஒன்று படாதவரை வெறும் பேச்சுக்களால் என்ன பயன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *