வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
இயற்கை அன்னையின் ருத்ர தாண்டவம்!
சென்ற ஞாயிற்றுக்கிழமை, அந்தி சாயும் வேளையில் , 6.11 மணிக்கு சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து , 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது நூற்றுக்காணக்கான உயிர் இழப்புகளையும்,பெரும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள இயற்கை அன்னையின் கோர தாண்டவம் அதற்கு பின்பும் நின்றபாடில்லை. வியாழன் இரவு பத்தேகால் மணியளவில் மீண்டும் ஒரு முறை ,ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூடான் நாடுகளை உலுக்கிய இந்த நில நடுக்கம் இதுவரை 100 பேர் வரை பலி வாங்கியுள்ளது. சிக்கிமில் மட்டுமே மிக அதிகமானோர் இறந்துள்ளனர். கடந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே மீளாத சூழலில் மீண்டும் பூகம்பம் ……. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல கிராமங்களுக்கு இன்னும் நிவாரணக் குழுவினர் போக முடியாமல் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் பல்வேறு உதவிகளுக்காகத் தவிப்புடன் காத்துக்கிடக்கின்றனர். தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நம் சக மனிதர்கள் படும் துன்பங்கள் காண சகிக்க இயலாதவை.ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் முழுமையாக நாசமடைந்திருக்கின்றன. இலட்சக்கணக்கான கட்டிடங்கள் பெருமளவில் சேதமடைந்திருக்கின்றன என்பது அதிகாரப்பூரவமான தகவல். மின் இணைப்பும், தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, அலைபேசி என தகவல் தொடர்பும் இன்றி வெளிஉலகத் தொடர்பே இல்லாமல் இருப்பது எத்தகைய கொடுமை………
—
இது போன்று நெருக்கடியான சூழலில் நம் ராணுவத்தின் சேவை மிகவும் போற்றுதலுக்குரியதாகும். பாதைகள் கூட சரியாக இல்லாத இடங்களிலும் சிரமத்துடனேயே நுழைந்து பல்வேறு மராமத்துப் பணிகள் செய்து கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். இது குறித்து பேசுகையில் இராணுவ உயர் அதிகாரி திரு.சஞ்சய் சர்மா , இது வரை செய்ததெல்லாம் ஒன்றுமில்லை, இனிதான் பெரும் சவால்கள் நம் முன் இருக்கின்றன என்கிறார். வியாழனன்று ஏற்பட்ட மற்றொரு பூகம்பம் ஏற்படுத்திய அழிவுகளும் சேர்ந்து கொண்டது மக்கள் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதும் உணர முடிந்தாலும் , செய்வதறியாது திகைத்திருக்கும் வேளையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்களின் ஆதரவும், உதவிக்கரமும் ஆறுதலளிப்பதாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் இது போன்று உதவிகள் கிடைக்கும் வகையில் மராமத்துப் பணிகள் இன்னும் விரைவாக செய்யக்கூடும் என்ற ஆவலும் மிஞ்சுகிறது.
இன்று மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில் இயற்கை அன்னையின் கருணைப்பார்வையின் மூலம், வானவில் வெளிப்பட்டு ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் முகத்தில் மெலிதான புன்னகை கீற்றும் வேளிப்படுகிறது.
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். நான் எழுத நினைத்ததை மேலும் சிறப்பாக தந்துள்ளீர். சுருக்கமும் தெளிவும். அனைத்து மாநிலங்களிலிருந்தும் இது போன்று உதவிகள் கிடைக்கும் வகையில் மராமத்துப் பணிகள் இன்னும் விரைவாக செய்யக்கூடும் என்ற ஆவலும் மிஞ்சுகிறது. ~பாயிண்ட் மேட்.
நம் ராணுவத்தின் சேவை:~ இதன் பின்னனி: திறன் + கட்டுப்பாடு + பணி + ஆணைக்கு உட்படுவது;
இவை யாவற்றையும் நாம் யாவுரும் கற்க முடிந்தால், We become Jonathan Livingstone Seagull.