கோலிவுட் குண்டு – தொலைக்காட்சி நிகழ்ச்சி
பாலிமர் தொலைக்காட்சியில் : கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என எந்த பாகுபாடும் இல்லாமல் சினிமா உலகில் நடைபெறும் அத்தனை விஷயங்களையும் ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து சூடான சுவையான, பரபரப்பான சினிமா செய்திகளை சுவாரஸ்யத்தோடு நேயர்களுக்கு விருந்தாக படைக்கிறது கோலிவுட் குண்டு.
வழக்கமான சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோனத்தில் நகைச்சுவை ரசத்தோடு இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அறிமுக தொகுப்பாளர்கள் விஜய்குமாரும், ஜனப் பிரியாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்நிகழ்ச்சி புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.