ஆர்பரித்து பார்த்தனே, மேற்புரத்தில் ஆடுநீ!
பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல், -நீர்பரப்பாய்
அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!

இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
ஆகவே ஆடாதே மோகவாய் ஆட்டத்தை!
யோகமாம் கீதை எடு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *