Skip to content
June 14, 2025
  • 16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
  • நிர்வாகக் குழு
  • ISSN: 2348 – 5531
  • Facebook
  • Twitter
  • Youtube
வல்லமை

வல்லமை

Peer-Reviewed-banner-2019
Primary Menu வல்லமை

வல்லமை

  • செய்திகள்
    • திரை
    • சிறப்புச் செய்திகள்
    • அறிவியல்
    • அறிந்துகொள்வோம்
    • அறிவிப்புகள்
  • இலக்கியம்இலக்கியம்
    • கட்டுரைகள்கட்டுரைகள்
    • சிறுகதைகள்கதைகள்
    • கவிதைகள்கவிதைகள்
    • மரபுக் கவிதைகள்
    • தொடர்கதை
    • வெண்பா
    • மொழிபெயர்ப்பு
    • இசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்
    • சொற்சதங்கை
    • திருமால் திருப்புகழ்பெருமாள் திருப்புகழ்
    • கிரேசி மொழிகள்கிரேசி மொழிகள்
  • ஆய்வுக் கட்டுரைகள்
    • Peer Reviewed
    • English
    • Ethics Policy
    • Research Guidelines
    • Peer Review Policy
  • பத்திகள்
    • நாகேஸ்வரி அண்ணாமலை
    • நிர்மலா ராகவன்
    • சக்தி சக்திதாசன்
    • காவிரிமைந்தன்
    • பவள சங்கரி
    • க.பாலசுப்ரமணியன்
  • தொடர்கள்
    • நெல்லைத் தமிழில் திருக்குறள்
    • குழவி மருங்கினும் கிழவதாகும்
    • சேக்கிழார் பா நயம்
  • கேள்வி-பதில்
    • இ. அண்ணாமலை
    • சட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்
    • மனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்
  • வல்லமையாளர்வல்லமையாளர் விருது!
    • வல்லமையாளர் பட்டியல்
    • மக்கள் திலகம் கட்டுரைப் போட்டி
    • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி
    • இணையவழி பயன்பாடுகள்
    • என் பார்வையில் கண்ணதாசன்
    • படக்கவிதைப் போட்டிகள்
  • காணொலி
  • மேலும்
    • வேலைவாய்ப்பு
    • சமயம்
    • தமிழ் தட்டச்சு
    • வாசகர் கடிதம்வாசகர் கடிதம்
      • பொது
    • நுண்கலைகள்நிழற்படம்,நுண்கலைகள்
    • பெட்டகம்
    • கவியரசு கண்ணதாசன்
    • சுட்டும் விழிச்சுடர்!
    • தலையங்கம்தலையங்கம்
    • ஓவியங்கள்ஓவியங்கள்
    • ஜோதிடம்
    • English
  • மின்னூல்கள்
  • மேலும் 1
    • வசனக்காரர்கள்
    • தொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #!37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.
    • வண்ணப் படங்கள்
    • நேர்காணல்கள்நேர்காணல்கள்
    • பாரதிக்குத் தெரிந்த மொழிகள்
    • அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்
    • இயற்கையில் எழுந்த இசை
    • ஒலி வெளிஒலி வெளி
  • மேலும் – 2
    • செல்லம்
    • சமையல்
  • சிறப்பிதழ்கள்
  • Home
  • 2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்
  • Featured
  • அறிவியல்

2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்

சி.ஜெயபாரதன் July 16, 2018 0

Posted on July 15, 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

 

நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
நிலவில் தடம் வைத்தார்.
பூமியைச் சுற்றி வரும்
அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
சிலநேரம் தங்கிச்
சுற்றுலாப் பயணம்  செய்ய
நிற்கிறார்  வரிசையில்
புவி மனிதர்  !

தட்டாம்பூச்சி போல் பறக்குது !
தரணியில் முதலாய்ப் பறக்குது !
பரிதியின் சக்தியால் பறக்குது !
எரிசக்தி இல்லாமல் பறக்குது !
பகலிலும் இரவிலும் பறக்குது !
பசுமைப் புரட்சியில் உதித்தது !
பாதுகாப் பாய்க் கீழ் இறங்குது !
நாற்பது குதிரைச் சக்தியில்
நான்கு காற்றாடி உந்துது !
பனிரெண் டாயிரம் செல்கள்
பரிதிச் சக்தியை அளிப்பது !
ஒற்றை விமானி ஓட்டுவது !
ஒருநாள் பறந்த ஊர்தி
இருபது நாளினிப் பறக்கும் !
அட்லாண்டிக் கடலைக் கடக்கும் !
அகில உலகைச் சுற்றும் !
நூறாண்டுக்கு முன்னே பறந்த
ரைட் சகோதரர் ஊர்தி போல்
வரலாற்று முதன்மை பெறுவது !

+++++++++++++++

 
 
2019 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்
அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும்  தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன.  ஆனால் எப்போது என்று இன்னும்  தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.
வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில் [Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் !  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.
வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  காலிஃபோர்னியா  மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(ஜூலை 8, 2010)


“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

“நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

“எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


+++++++++++++++++++++++
https://youtu.be/bkPJQY7rQWA

தகவல்:

Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

6.  http://www.spacedaily.com/reports/Boeing_SpaceX_unlikely_to_make_manned_flights_to_ISS_in_2019_999.html  [July 12, 2018]

7. https://phys.org/news/2018-07-space-tourist-flights.html  [July 13, 2018]

8.  http://www.spacedaily.com/reports/First_space_tourist_flights_could_come_in_2019_999.html  [July 13, 2018]

******************

S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 15, 2018] [R-1]

Attachments area
Preview YouTube video Space Tourism Is Coming: Flights from Virgin Galactic and Blue Origin could Come in 2019

Space Tourism Is Coming: Flights from Virgin Galactic and Blue Origin could Come in 2019
ReplyForward

பதிவாசிரியரைப் பற்றி

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

See author's posts

Post Navigation

Previous படக்கவிதைப் போட்டி (170)
Next தமிழின் சக்தி

More Stories

image0 (10)
  • அறிவியல்
  • கட்டுரைகள்

மருத்துவ அறிவியலின் எதிர்காலமும், செயற்கை நுண்ணறிவின் தாக்கமும்

admin February 24, 2025 0
images
  • அறிவியல்
  • கட்டுரைகள்

விண்வெளியில் வற்றாத சுரங்கம் – சிறுகோள்களின் பெருவளங்கள்

admin November 4, 2024 0
1
  • அறிவியல்
  • கட்டுரைகள்

கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்

admin October 21, 2024 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

  • Latest
  • Popular
  • Trending
  • Chinmayi dhee arr
    • இலக்கியம்
    • கட்டுரைகள்
    • பத்திகள்

    முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

    அண்ணாகண்ணன் June 3, 2025 0
  • IMG_20200615_070540280_HDR~2
    • அறிந்துகொள்வோம்
    • இலக்கியம்
    • கட்டுரைகள்

    காகத்தின் நுண்ணறிவு!

    பவள சங்கரி May 30, 2025 0
    • சிறுகதைகள்

    சாதுரியம் (சிறுகதை)

    admin May 28, 2025 0
  • IMG_9595
    • இலக்கியம்
    • கவிதைகள்

    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    ஜெயராமசர்மா May 28, 2025 0
  • 20250521_122530-EDIT
    • கட்டுரைகள்
    • நுண்கலைகள்
    • வரலாறு

    கங்கைகொண்ட சோழபுரம்

    பவள சங்கரி May 26, 2025 0
  • 3138264542_5719167fda
    • இலக்கியம்
    • கவிதைகள்

    தமிழின் இமயம் திருவள்ளுவர்

    கவிஞர் இரா.இரவி January 9, 2013 52
  • 11212317_828493147204886_734930307_n
    • Featured
    • home-lit
    • இலக்கியம்
    • கவிதைகள்
    • நுண்கலைகள்
    • படக்கவிதைப் போட்டிகள்
    • வண்ணப் படங்கள்

    படக்கவிதைப் போட்டி! (11)

    editor May 4, 2015 48
  • 11215903_831189076935293_1668258411_n
    • Featured
    • home-lit
    • நுண்கலைகள்
    • படக்கவிதைப் போட்டிகள்
    • போட்டிகளின் வெற்றியாளர்கள்
    • வண்ணப் படங்கள்

    படக்கவிதைப் போட்டி (12)

    editor May 11, 2015 47
  • 11180014_822542801133254_1503319428_n
    • Featured
    • home-lit
    • இலக்கியம்
    • கவிதைகள்
    • நுண்கலைகள்
    • வண்ணப் படங்கள்

    படக்கவிதைப் போட்டி (9)

    editor April 20, 2015 45
  • Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue
    • Featured
    • home-lit
    • இலக்கியம்
    • கவிதைகள்
    • நுண்கலைகள்
    • படக்கவிதைப் போட்டிகள்
    • வண்ணப் படங்கள்

    படக்கவிதைப் போட்டி (5)

    editor March 23, 2015 41
  • Chinmayi dhee arr
    • இலக்கியம்
    • கட்டுரைகள்
    • பத்திகள்

    முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

    அண்ணாகண்ணன் June 3, 2025 0
  • IMG_20200615_070540280_HDR~2
    • அறிந்துகொள்வோம்
    • இலக்கியம்
    • கட்டுரைகள்

    காகத்தின் நுண்ணறிவு!

    பவள சங்கரி May 30, 2025 0
    • சிறுகதைகள்

    சாதுரியம் (சிறுகதை)

    admin May 28, 2025 0
  • IMG_9595
    • இலக்கியம்
    • கவிதைகள்

    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    ஜெயராமசர்மா May 28, 2025 0
  • 20250521_122530-EDIT
    • கட்டுரைகள்
    • நுண்கலைகள்
    • வரலாறு

    கங்கைகொண்ட சோழபுரம்

    பவள சங்கரி May 26, 2025 0

Categories

English Featured home-lit Peer Reviewed அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்

CoverNews Social

  • Facebook
  • Twitter
  • Youtube

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

தவற விட்டவை

Chinmayi dhee arr
  • இலக்கியம்
  • கட்டுரைகள்
  • பத்திகள்

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

அண்ணாகண்ணன் June 3, 2025 0
IMG_20200615_070540280_HDR~2
  • அறிந்துகொள்வோம்
  • இலக்கியம்
  • கட்டுரைகள்

காகத்தின் நுண்ணறிவு!

பவள சங்கரி May 30, 2025 0
  • சிறுகதைகள்

சாதுரியம் (சிறுகதை)

admin May 28, 2025 0
IMG_9595
  • இலக்கியம்
  • கவிதைகள்

பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

ஜெயராமசர்மா May 28, 2025 0
20250521_122530-EDIT
  • கட்டுரைகள்
  • நுண்கலைகள்
  • வரலாறு

கங்கைகொண்ட சோழபுரம்

பவள சங்கரி May 26, 2025 0

வல்லமை மின்னிதழ்

15 ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

புதிய பதிவுகள்

  • முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!
  • காகத்தின் நுண்ணறிவு!
  • சாதுரியம் (சிறுகதை)
  • பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !
  • கங்கைகொண்ட சோழபுரம்

Recent Posts

  • முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!
  • காகத்தின் நுண்ணறிவு!
  • சாதுரியம் (சிறுகதை)
  • பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !
  • கங்கைகொண்ட சோழபுரம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Name

Email


Categories

English Featured home-lit Peer Reviewed அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்
  • Facebook
  • Twitter
  • Youtube
Copyright ©vallamai.com All rights reserved. | CoverNews by AF themes.