கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’அம்பாளும் பார்த்திட, நம்பாள் நடராசர்
தெம்பாக ஆடுகிறார் தாண்டவம் ,-வம்பாள்
தபஸ்விகள் ஏவினர், தாருகா கானில்
அபஸ்மாரப் புல்(தர்ப்பை)மீ(து) அரன்போல்,-சபாஷ்நீ!
சிவானி! எருமை சிகைபிடித்துக் கொன்ற,
பவானி பவநோய் பிடி’’…. .கிரேசி மோகன்…!