ஆழ்ந்த இரங்கல் …

நம் மதிப்பிற்குரிய அறிவியல் விஞ்ஞானி திருமிகு ஜெயபாரதன் ஐயா அவர்களின் அன்பு மனைவியார் தசரதி அவர்கள் நேற்று (17.11.18) மாலை 6.10 மணியளவில் இறையடி நிழலில் தஞ்சம் புகுந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், நம் ஜெயபாரதன் ஐயாவும் அவர்தம் குடும்பத்தினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.

3 thoughts on “ஆழ்ந்த இரங்கல் …

  1. ஜெயபாரதன் ஐயாவுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

    வருத்தத்துடன்,
    மேகலா இராமமூர்த்தி

  2. இந்தத் துக்கச் செய்தியை இப்போதுதான் தற்செயலாகப் பார்வையிட்டேன். மிகச்சிறந்த விண்வெளி அறிவியற் கட்டுரைகளையும், சரித்திரச் செய்திகளையும் சுவைபடத் தரும் திரு. ஜெயபாரதன் அவர்களுக்குப் பக்கத்துணையாயிருந்து சேவையாற்றிய அவரது அன்பு மனைவியின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகத்தின்அறிவியல் வளர்ச்சிக்குப் பெரும் தடங்கலையேற் படுத்தியிருக்கிறது. அவருக்குத் தற்போது ஏற்பட்டுள்ள ஆற்றொணா நிலையிலிருந்து அவர் மீள இறைவன் அருள்பாலிப்பாராக. திருஜெயபாரதனுக்கும் குடுமபத்தாருக்கும் சுற்றத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். திருமதி தசரதி ஜெயபாரதனின் ஆன்மா இறைவனின் சன்னிதியில் சாந்தியடைய எல்லாம் வல்ல திருவருள் துணைநிற்குமாக.

  3. திருமதி தசரதி ஜெயபாரதன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். ஜெயபாரதன் அவர்கள் இந்த இழப்பினைத் தாங்கி, அம்மாவின் தோன்றாத் துணையுடன், பணிகளைத் தொடர வேண்டும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க