இந்த வார வல்லமையாளர் (288)

இந்த வார வல்லமையாளராக  பத்திரிகையாளர் ரவி அகர்வாலை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. ரவி அகர்வால் லண்டனில் 1982-ல் பிறந்தவர். கல்கத்தாவில் வளர்ந்து, ஹார்வர்ட் பல்கலையில் இதழியல் பயின்றவர். சிஎன்என், டெல்லி தலைவராகப் பணிபுரிந்து, தற்போது ‘ஃபாரின் பாலிசி’ என்னும் ஜர்னலின் ஆசிரியர் ஆகியுள்ளார். https://en.wikipedia.org/wiki/Ravi_Agrawal

 

1990களில் செல்பேசிகளால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒன்று நிகழ்ந்தது. அதே போல இப்பொழுது  இந்தியாவில் வலைபேசி பல கோடி மக்களின் கைகளில் வந்துகொண்டுள்ளது. வலைபேசி என்பது ஸ்மார்ட் ஃபோன்ஸ். காமிராவும், இணையத்துக்கு சென்று எழுதுவதும், படிப்பதும், வாட்ஸப் மூலம் உலகெங்கும் செலவின்றி உறவாடவும் வலைபேசிகள் உதவுகின்றன. 30 கோடி மக்கள் தற்போது வலைபேசிகளைப் புழங்குகிறார்கள். இது 2021-ல் 50 கோடி வலைபேசிப் பயனர்களாக உயரும் என இந்தியர்கள் கணக்கிடுகிறார்கள். பேரிடர்கள் தாக்கும்போது சுனாமி, சூறாவளிப் புயல், அணுநிலைய விபத்து, … போன்றவைகளை மக்களுக்கு உடனுக்க்டன் அறிவிக்க வலைபேசிகள் மிக உதவும். உள்ளங்கையில் உலகம் என்பதை இந்தியாவில் உண்மையாக்குவது வலைபேசிகள் தாம். இது ஓர் யுகப்புரட்சி.

ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இந்தியாவில் வலைபேசி யுகப்புரட்சி பற்றி விரிவான நூல் எழுதிய இளைஞர் இரவி அகர்வாலை வாழ்த்தி வல்லமையாளர் என அறிவிக்கிறோம். மேலும் பல நூல்கள், கட்டுரைகள், தொலைக்காட்சி, ஆய்வு ஜர்னல்கள், … இவற்றில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை மேற்குத்திசை நாடுகளில் வாரந்தோறும் பிரபலம் ஆக்குவதன் மூலம் தொழில், வணிக உறவுகளை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் பெருக்கும் அரிய பணீயைச் செய்யும் ரவி போன்றோர் பங்களிப்பு முக்கியமானவை.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், [email protected], [email protected] ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க