கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பார்த்தன் பார்த்திட பார்த்தனின் சாரதி
வேர்த்தல் விலக்கிடும் விஸ்வரூபம், -தீர்த்தம்
குளக்கரை அல்லியூரில்(திருவல்லிக்கேணி) கோவிந்தர், நெஞ்ச
உளைச்சலை நீக்கும் உரு(உருவம்)…..கிரேசி மோகன்….!
திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
———————————————————————-
வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
சாதகனென் சிந்தையில் சேர்….!
அப்பாவின் 85வது பிறந்த நாளில் எழுதியது
——————————————————-
பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
———————————————-
மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு….கிரேசி மோகன்….!