வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்

0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி சென்ற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம். இன்று வரை 60 லக்ஷம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடந்துள்ளது. இந்த யாகம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இன்று வரை இந்த யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர்.நந்தகோபால் IAS அவர்கள், இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்டசெயலாளர் திரு. எம்.பால்மாரியப்பன் அவர்கள், திரு. சோளிங்கர் பிரகாஷ் அவர்கள், ஸ்ரீராம் பட்டாசாரி, தென் இந்திய புரோகித சங்க தலைவர் வி.ஆர்.சீதாராமன் மற்றும் நிர்வாகிகள், ராணிப்பேட்டை விக்னேஷ் மோட்டார் உரிமையாளர், வாலாஜாபேட்டை W.G.முரளி, முன்னாள் தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

Email: danvantripeedam@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.