இல்லம்தோறும் இசை மழை – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் பஜனாமிர்தம் நிகழ்ச்சி 25 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவியர் அல்லது பஜன் மண்டலியைச் சார்ந்தவர்களோ பங்கேற்க நேயர்களின் உள்ளங்களையும், இல்லங்களையும் பக்தி வசப்படுத்த ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி!
இறைவனை வழிபட உகந்த நேரம் என்று கருதப்படும் மாலை வேளையில் 6 முதல் 7 மணி வரை பரவசமூட்டும் பக்தி பஜனை இசைப் பாடல்களை மழைச் செல்வங்கள் பக்கவாத்தியங்களுடன் வழங்கி உற்ச்சாகமூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடப்படும் பாடல்கள் குறித்த தகவல்களும் இடம்பெறுவதால் மேலும் சுவை கூடும் என்பதில் ஐயமில்லை!

