திரை

”வழிவிடு கண்ணே வழிவிடு” – திரைப்படம்

தாயை மதிக்காத பிள்ளையின் நிலை, கடைசியில் என்னவாகும் என்பதை உணர்த்தும் திரைப்படம் ‘வழிவிடு கண்ணே வழிவிடு’.  எம்.ஜி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளிவரத் தயார் நிலையில் உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக தமிழ் அறிமுகமாகிறார்.  இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மதுஸ்ரீ அறிமுகமாகிறார்.  மேலும் நீபா, மாலினி, சார்லி, பாண்டு, பூவிலங்கு மோகன், கஜேந்திரன், சிசர் மனோகர், காதல் சுகுமார், ஐசக், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ரத்தம் இல்லாத ஒரு தரமான சிறந்த படத்தை தயாரித்துள்ளனர் என தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டுப் பெற்ற இத்திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு மதுரை, ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது.  எல்லா கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளிவரத் தயார் நிலையில் உள்ளது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க